#BREAKING: மும்பையில் 2000-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் போராட்டம் .!
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றதால் 21 நாள்களுக்கு பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரை அதாவது மேலும் 19 நாள்கள் ஊரடங்கை நீட்டித்தார்.
இந்நிலையில் மும்பையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி மும்பை பாந்த்ராவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக்கூறி தொழிலாளர்கள் போராட்டம்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில் , ஊரடங்கு காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளதால் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது எனவே தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.