பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவிற்கு பலி.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,716-ஆக உள்ளது. 96 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதில், அந்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ப்ராஸும் கொரோனவால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு பெஷாவரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் 1994 ஆண்டு வரையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்.