சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்.!
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் சென்னையில் மட்டுமே 200-க்கும் அதிகமாகமானோர் கோரனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வெளியில் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் இன்றி வெளியில் சுற்றினால் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும், நடந்து சென்றாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டது.