இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ரயில் சேவை ரத்து

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே பிரதமர் நரேந்திர மோடி ,இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.இந்நிலையில் தான் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
March 31, 2025