#LIVE : மக்களின் சிரமத்தை உணர்கிறேன் – பிரதமர் மோடியின் உரை.!
ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனிடையே ஒடிஷா, பஞ்சாப் மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
- கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.
- ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது.
- தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
- சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம்.
- கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்.
- நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
- உரிய நேரத்தில், உரிய முடிவுகள் எடுக்காமல் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக ஏற்பட்டிருக்கும்.
- உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
- கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி முக்கிய பங்கு வகிக்கிறது.
- நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மோடி அறிவிப்பு.
- 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு.
- கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.
- ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும்.
- ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் நடைமுறைக்கு வரும்.
- முக கவசங்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.
- Aarogya Setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
- ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
- வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம்.
- ஊழியர்கள் யாரையும் நிறுவனங்கள் நீக்க வேண்டாம்.
- கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டும்.