30 லட்சம் கோடி இருக்கிறது ; பிரதமர் தருவாரா மாட்டாரா!? – ப.சிதம்பரம் டிவீட்.!

மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. அதில், ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி- முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.
இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதமர் பேச உள்ளதை குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம்.
இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன்
ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) April 13, 2020