நிதி திரட்ட ஷூக்களை ஏலம் விட்ட வீராங்கனை.!
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் டென்னிஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா தனது ஆட்டோகிராஃப் உடன் கூடிய ஷூக்களை ஏலம் விட முடிவு செய்துள்ளார்.
இந்த மாதம் 25-ம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் கேட்கலாம் இதன் மூலம் கிடைக்கும் வருமான தொகையை அமெரிக்காவின் புளோரிடா மாகாண மக்களின் நிவாரணத்திற்காக வழங்க உள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட்டு லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்பீல்ட் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.60 லட்சத்து 70 ஆயிரம் ஜோஸ் பட்லர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.