ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர் லால்பெகுலா.!

Default Image

மிஸோரம் சைனாட் மருத்துவமனை ரத்த வங்கியில்  ஏற்பட்ட ரத்த தட்டுப்பாட்டால் இந்திய கால்பந்து அணி நட்சத்திர வீரர் ஜேஜே லால்பெகுலா மனித நேயத்துடன் ரத்த தானம் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் , மிஸோரம் சைனாட் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என்ற செய்தி யங் மிஸோ சங்கத்தின் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற சமயங்களில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது உடனடியாக  மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுத்தேன்.
நம் எல்லோரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது. என்னால் இயன்ற சிறு உதவியை செய்திருக்கிறேன். இது மிகவும் திருப்தியை கொடுத்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்