சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி?
நாம் தினமும் விதவிதாமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மைதா மாவு அரை கப்
- அரிசி மாவு கால் கப்
- வெங்காயம் 2
- எண்ணெய் ஒரு கப்
- உப்பு அரை தேக்கரண்டி
- பச்சை மிளகாய் 2
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பிசறி உப்பு சோடா உப்பு சேர்த்து பிசைய வேண்டும்.
பின் அதில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றவும். இதேபோல 5 கரண்டி ஊற்ற வேண்டும். 30 நொடிகள் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 போண்டாவை போட்டு எடுக்கலாம். இப்போது சுவையான மைதா கார போண்டா தயார்.