தமிழகம் முழுவதும் இன்று 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகம் முழுவதும் இன்று 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக,தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, 2ம் கட்ட முகாமை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என்றும், கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.