சென்னையில் வெளிநாடு செல்ல இருந்தவர்களிடம் பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பல் கைது!

Default Image

போலீசார் சென்னையில் வெளிநாடு செல்ல இருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை  கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டணத்தைச் சேர்ந்த முகமது பயாத், சுக்கூர், குரைஷ், பிர்தவுஸ், அக்பர் ஆகியோர் வெளிநாடு செல்வதற்காக கடந்த 3ஆம் தேதி சென்னை புனித தோமையார் மலை ஜிஎஸ்டி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று தங்களை போதைத் தடுப்பு போலீஸ் என்று கூறி, அவர்களை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு நோக்கி அழைத்துச் சென்றனர். பின்னர் பயாத் குழுவினரிடமிருந்த வெளிநாட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்ட அந்தக் கும்பல் அவர்களை வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் தனித்தனியே இறக்கிவிட்டுள்ளனர்.

தங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தோமையார் மலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அப்போது இந்தக் கொள்ளையில் திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி சென்ற தனிப்படையினர் சரவணன், அருண்குமார், நிர்மல் ஜோஷ், மோகன்ராஜ், ஷேக் முகமது, பிரின்ஸ் பிரசன்னராஜ் மற்றும் அக்பர் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 லட்சத்து 36 ஆயிரத்து 430 ரூபாயும், 2 போலி கைத்துப்பாக்கிகளும், வாக்கி டாக்கி மற்றும் கைவிலங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்