கொரோனாவால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி.! – உலக வங்கி தகவல்.!
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் இந்த சரிவு குறித்து, உலக வங்கி தனது அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உலக வங்கி அறிக்கையில் இந்தியாவை பற்றி கூறுகையில் , ‘ இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும். இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவே இருக்கும். அடுத்த ஆண்டு (2021) ஆண்டு அது 2.8 சதவீத அளவுக்கு சரியும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் தான் இருந்து வந்தது. அப்படி இருக்கையில், கொரோனா வைரஸ் வேறு பரவத தொடங்கி விட்டது.
இந்த வைரஸ் பரவலை தடுக்கவே அரசு 21 நாள் ஊரடங்கை அறிவித்தது. இதனால் உள்நாட்டு உற்பத்தி, வினியோகிப்பதில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் புதிய முதலீடுகளில் தாமதம் ஏற்படும். இதனை தொடர்ந்து, 2022-ம் ஆண்டு மீண்டும் இந்திய பொருளாதாரம் 5 சதவீதமாக எழுச்சி பெரும்.’ என குறிப்பிடப்பட்டிருந்தது.