காஞ்சிபுரம் முருகன் கோயிலில் வெண்கல சிலை திருட்டு!
ஏழரை கிலோ எடை கொண்ட கட்சபேஸ்வரர் வெண்கலச் சிலை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் திருடு போனது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் அந்தக் கோவிலில் கட்சபேஸ்வரர் சிவாச்சாரியர் சிலை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருடு போயுள்ளது.
கோவில் நிர்வாகி தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குமரகோட்டம் முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் சிலையை திருடி சென்றவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.