கொரோனா நடவடிக்கைகள் குறித்து திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனராம். இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி (புதன் கிழமை ) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.