இன்று முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம்

Default Image

இன்று  முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டார் .அவரது அறிக்கையில்,இன்று  முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும் . ராயபுரத்தில் உள்ள 7 உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும். உணவை வாங்கும் போது அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்