ஊரடங்கை தளர்த்தும் முன் இந்த 6 விஷயங்களில் கவனம் தேவை – உலக சுகாதார அமைப்பு.!

Default Image

கொரோனா வைரஸால் உலக முழுவதும் 1,794,641 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸால் 109,920 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,651 உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பைக்கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கை கொரோனா வைரஸ் ஒழியும் முன் தளர்த்தினால்  மீண்டும் எழுச்சி பெற்று விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானாம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் கூறுகையில் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில நாடுகள் கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடிவெடுக்கின்றனர்.

ஆனால் அப்படி செய்யும்போது அது மிகப்பேரழிவான முடிவுக்கு வழிவகுக்கும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தான்  ஊரடங்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாதிப்பு கட்டுக்குள் வரும் முன் ஊரடங்கை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று மோசமான பேரழிவுகளைத் ஏற்படுத்தும்.

மேலும் ஊரடங்கை நீக்கும் முன் உலக நாடுகள் இந்த  6 முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) கொரோனா  பரவலை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

2) மக்களுக்கு போதுமான அளவு பொதுச்சுகாதாரச் சேவையை தயாராக வைத்திருக்க வேண்டும்.

3) வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்.

4) வேலை செய்யும் இடங்களிலும் , பள்ளி, கல்லூரிகளில் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

5)  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சரியாக சோதனை செய்யவேண்டும்.

6) அனைத்து மக்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் சென்று இருக்க வேண்டும. இந்த அனைத்தையும்  செய்த பின்புதான் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்