குழந்தைக்காக ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த ஒட்டகப்பால்.!
இந்தியாவில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருகின்றனர்.
இந்நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையெடுத்து மும்பையை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென ட்விட் செய்தார். பின்னர் 20 லிட்டர் ஒட்டகப்பால் ரயில்வே துறை கொண்டு சேர்த்தது.
ரேனு குமாரி என்ற பெண் பிரதமர் மோடி டேக் செய்து விட்டு ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அந்த பதிவில் , என்னுடைய மூன்றரை வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லை தற்போது ஆட்டுப்பால் , மாட்டுப்பால் ஒவ்வாமையை ஆக உள்ளது. ஒட்டகப்பால் வேண்டும்.
ஆனால் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் ஒட்டகப்பால் கிடைக்கவில்லை . அதனால் பால் அல்லது பால் பவுடர் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Final update
20 lts. camel milk reached Mumbai by train last night. The family has kindly shared part of it with another needy person in the city.
Thanking Sh.Tarun Jain, CPTM, North-West Railways who ensured an unscheduled halt to pick the container.@RailwaySeva@RailMinIndia https://t.co/fCxI6EJTrX
— Arun Bothra (@arunbothra) April 11, 2020
இந்நிலையில் இந்த செய்தி ஐஏஎஸ் அதிகாரி அருண் போத்ராவின் பார்வைக்கு செல்ல உடனடியாக ராஜஸ்தானில் உள்ள ஒட்டகப்பால் பொருட்கள் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் பாலை எப்படி சேர்ப்பது என யோசித்தபோது ரயில்வே துறையிடம் உதவி கேட்டனர்.
தற்போது சரக்கு ரயில் மட்டுமே இயங்கி வரும் நிலையில் ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு ஒட்டகப்பால் கொண்டு வரப்பட்டது.