அஸ்வினி உடன் செத்து போயிருப்பேன்…அஸ்வினி இல்லையெனில் நானும் இல்லை……
மாணவி அஸ்வினியை காதலித்து ஏமாற்றிய ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்று கொன்ற அழகேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினியை அவர் படித்த கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி எதிரே வாலிபர் அழகேசன் கழுத்தை அறுத்து கொன்றார். இதை பார்த்த பொதுமக்கள் அழகசேனை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த அழகேசன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அழகேசன் நேற்று மதியம் 1 மணியளவில் டிஸ்சார்ஜ் ெசய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கே.கே.நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவனது வாக்குமூலத்தை வீடியோ மூலமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்து கொண்டனர். முகத்தில் காயம் ஏற்பட்டதால் அப்போது அவனால் சரியாக பேச முடியவில்லை.
இருப்பினும் சுமார் 1 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். இது, தொடர்பாக அழகேசன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:அஸ்வினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எதேச்சையாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் எனக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. இதனால், அவரை பார்க்க அடிக்கடி அவரது பகுதிக்கு செல்வேன். நான் அவரை தான் பின் தொடர்கிறேன் என்பது அஸ்வினிக்கு ஒரு நாள் தெரிந்தது. அதன்பிறகு அவரிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அவர் என்னிடம் பேச மறுத்தார். ஆனால், அவரை விடாமல் பின் தொடர்ந்தேன். முதலில் அஸ்வினியிடம் என் காதலை கூறினேன். அஸ்வினியை திருமணம் செய்து கொள்வதாக கூறினேன். அப்போது, அஸ்வினி என் குடும்பம் ஏழ்மையானது. நான் படித்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். எனக்கு காதலிக்க நேரமில்லை என்று கூறினார்.
ஆனால், அஸ்வினியை என்னால் மறக்க முடியவில்லை. இதனால், அவரை ெதாடர்ந்து காதலித்து வந்தேன். அதனால் மீண்டும் அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அதன்பிறகு நாங்கள் ஒருவருக்கொருவர் காதலிக்க ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்துடன் நெருக்கமானேன். அவர்களின் குடும்பத்திற்கு பண உதவி செய்தேன். என் பெற்றோருக்கு ெதரியாமல் வீட்டை அடமானம் வைத்து சுமார் 2 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன். இந்த நிலையில் திடீரென கடந்த சில மாதங்களாக அஸ்வினி என்னிடம் இருந்து விலகி செல்ல தொடங்கினார். இது குறித்து அஸ்வினியிடம் விசாரித்த போது, எங்கள் காதலுக்கு அவரது தாய் திடீரென எதிர்ப்பு தெரிவித்தார் என்பது தெரிய வந்தது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திடீரென உறவினர் பேச்சை கேட்டு அஸ்வினியிடம் பேசக்கூடாது என்று அவரது தாய் கூறியுள்ளார். இதனால், அஸ்வினி என்னிடம் பேசுவதை கூட தவிர்த்து வந்தார்.
இதனால், அஸ்வினி என்னை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக அவரது வீடு புகுந்து அவருக்கு தாலி கட்டினேன். அப்போது, நான் கட்டிய தாலியை அவர் தூக்கி எறிந்து விட்டார். அவர்களது குடும்பத்தினர் பேச்சை கேட்டு என் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது நான் தகுதியில்லாதவன் என்று கூறியிருந்தார். இந்த புகாரால் கோபம் வந்தது. இருப்பினும் அஸ்வினியின் பெற்றோர் சொல்லி கொடுத்தபடி புகார் அளித்திருப்பார் என்பதால் அதை நான் ெபாறுத்துக் கொண்டேன். அஸ்வினியை கே.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். அங்கிருந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.
அஸ்வினியும் என்னை ஏமாற்றி விட்டதால் எனக்கு அவர் மீதும் கோபம் வந்தது. இதனால், அஸ்வினியை நேரில் சந்தித்து அவரது முடிவை தெரிந்து கொள்ள முடிவு செய்தேன். கடந்த 2 நாட்களாக அவர் பின்னால் சென்றேன். அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. இதனால், ேநற்று முன்தினம் அஸ்வினி என்னுடன் வாழ மறுத்து விட்டால் அஸ்வினியை கொலை செய்யவும் திட்டமிட்டேன். இதற்காக இரண்டு கத்தி, பெட்ேரால் வாங்கி சென்றேன். அஸ்வினி கல்லூரி விட்டு வந்தார். அப்போது நான் அவரை மறித்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய், என்னை ஏமாற்றி சென்று விடலாம் என்று முடிவு செய்து விட்டாயா என்று கேட்டேன். அப்போது, உன்னை எனக்கு பிடிக்கவில்லை. என் பெற்றோர் சொல்லும் ஒருவரை தான் திருமணம் செய்வேன். உன்னை பிடிக்கவில்லை என்றார்.
அந்த ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கழுத்தை அறுத்தேன். கோபத்தில் அவரை கொலை செய்து விட்டேன் என்று வாக்குமூலத்தின் போது அழகேசன் தெரிவித்தார். போலீசாரிடம் எனக்கு இனி வாழ விருப்பமில்லை. நானும் சாக வேண்டும் என்று தான் பெட்ரோலை எடுத்து என் மீது ஊற்ற முயன்றேன். அதற்குள் கூடியிருந்த மக்கள் என்னை தடுத்து விட்டனர்.நானும் இல்லையெனில் அஸ்வினி உடன் செத்து போயிருப்பேன். இப்போதும் ஒன்று இல்லை. எனக்கு வாழ விருப்பமில்லை என்பதால் என்னையும் கொன்று விடுங்கள் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.