ரூ.3 கோடி நிதியுதவி வழங்கிய ராகவா லாரன்ஸ்! மீண்டும் நிதியுதவி வழங்கவுள்ளார்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியில் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,மக்களுக்கு உதவும் வண்ணம் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற உதவிகளை மக்கள் செய்து வருகிற நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ரூ.3 கோடி நிதியுதவி வாழங்கியுள்ள நிலையில், தற்போது இவர் மீண்டும் நிதியுதவி வழங்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வீடியோக்களில் பார்த்த மக்களின் அழுகை என்னை மிகவும் சொந்தரவு செய்தது. பிறகுதான் நினைத்தேன், வரும்போது எதுவும் கொண்டுவரவில்லை, போகும்போதும் எதுவும் கொண்டு செல்லப்போவதில்லை. இப்போது எல்லாக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. பசியால் வாடும், இச்சூழலில் அவதிப்படும் மக்களிடம் தான் கடவுள் உள்ளார் என நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை கடவுளுக்கு அளித்தால் அது மக்களிடம் சேராது. ஆனால் மக்களுக்கு அளித்தால் அது கடவுளைச் சென்று சேரும். ஏனெனில் கடவுள் எல்லோரிடமும் உள்ளார். சேவை செய்யவே கடவுள் எனக்கு வேலை அளித்துள்ளார். இந்தக் கடினமான நேரம் தான் சேவை செய்வதற்கான சரியான நேரம். எனவே மக்களுக்கும் அரசுக்கும் என்னாலான உதவிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளேன்.’ என கூறியுள்ளார்.