டெல்லி வருகை இலங்கை அதிபர் சிறிசேனா!
டெல்லியில் இன்று நடைபெறும் சர்வதேச சோலார் மாநாட்டில், இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள 45 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியின்போது அதிபர் சிறிசேனா ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் பௌத்த சிங்களவருக்கும் முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டதால் அங்கு 5 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. கலவரங்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறிவிட்டதாக பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பானில் சிறிசேனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.