பேரிடர்களை சந்திக்கும் தமிழகத்திற்கு 64.65 % நிதியா.?
விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் .இதையெடுத்து ரயில், விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க கூடாது என மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என பல மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்தனர். இதையெடுத்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பருப்பு , மசாலா பொருட்கள் போன்றவை மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் வேளாண் , தோட்டக்கலைதுறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் .இதையெடுத்து ரயில், விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க கூடாது எனவும் வலியுறுத்தி யுள்ளார்.மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கான பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15-வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33% ஒதுக்கும்போது தமிழகத்திற்கு 64.65% நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது என முதல்வர் தெரிவித்தார்.