இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை
நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529-ஆகவும், 653 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர் எனவும், 242 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.