முழங்கையில் உள்ள கருமை நீங்கி வென்மையாக மாற இதை செய்யுங்கள்!
கை கால்கள் வெண்மையாக இருந்தாலும் முழங்கை மற்றும் விரல்களின் மடங்கும் பகுதிகள் சற்று கருமை நிறமாக இருப்பது கையின் அழகை குறைத்து விடுகிறது. இதை எப்படி மாற்றலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- புதினா
- தண்ணீர்
- எலுமிச்சம்பழம்
செய்முறை
முதலில் அரை கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து அந்த நீரை முழங்கையில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் ஒரே மாதத்தில் முழங்கைப் பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விரைவில் வெள்ளையாகும்.