கொரோனா விடுமுறையில் சுயசரிதை எழுதும் சிரஞ்சீவி!
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகரை த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், இவர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் பேட்டியளித்த சிரஞ்சீவியிடம், த்ரிஷா குற்றசாட்டு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், த்ரிஷா ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அவர் வருத்தப்படும்படி யாராவது ஏதாவது சொன்னீர்களா என்று படக்குழுவினரிடம் கேட்டேன். அவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தனர்.
தற்போது மணிரத்னம் இயக்கும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றும், அந்த படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்படுகிறது என்றும், அதனால் தான் என் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் பிறகு தெரிந்துகொண்டேன்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது கொரோனா பரவல் தொடர்பான விஷயங்களை கவனித்து வருகிறேன். அதே வேளையில், சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பாக இயங்குகிறேன். கிடைத்த ஓய்வில் நிறைய படங்களை பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வந்து, அதுபற்றிய குறிப்புகளை சேகரித்து வருகிறேன். விரைவில் என் சுயசரிதையை ஒலி வடிவிலும், புத்தக வடிவிலும் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.