ஊரடங்கு தொடரும் என்ற பயத்தில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலார்கள்.!
சூரத்தில் புலம் பெயர்ந்த தொழிலார்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற பயத்தில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,035 பேருக்கு கொரோனாவும் , 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநில முதல்வர்கர்கள் ,மருத்துவர்கள் என பலர் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Bad news coming in from Surat. Migrant workers in the city came out on the streets in huge numbers asking for their salaries and demanding permission to get back home. Torching of vegetable carts, stone pelting and lathicharging followed. Around 70 detained. pic.twitter.com/qjg2vAb2OR
— Asmita Nandy (@NandyAsmita) April 10, 2020
இதையெடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் புலம் பெயர்ந்த தொழிலார்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற பயத்தில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சாலையை மறித்து , கற்களை வீசியும் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.