அமேசான் காட்டு பழங்குடியினரையும் விட்டு வைக்காத கொரோனா – 15 வயது சிக்குவனுக்கு தீவிர சிகிச்சை!
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் இறந்து விட்டாலும், அதற்கும் அதிகமான பலர் குணமடையவும் செய்கின்றனர். இந்நிலையில், இந்தியாவிலும் தற்பொழுது பல மாநிலங்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள பிரம்மாண்டமான அமேசான் மழைக்காடுகளில் வசிக்கக்கூடிய யானோமாமி பூர்வகுடி எனும் பழங்குடியினருக்கு இந்த கொரோனா வைரஸ் தற்போது தாக்கியுள்ளது.
வெளி உலக தொடர்பு இல்லாமல் காலங்காலமாக காட்டு பகுதியில் வசித்து வரும் இவர்களில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு இந்த வைரஸ் பாதித்துள்ளது. இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டுள்ளது. இதுவரை பூர்வகுடி மக்களில் 7 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.