கொரோனா முன்னெச்சரிக்கையாக தனது ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த நபர்.!

மனித சமூகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் தாக்குமோ என அச்சம் நிலவுகிறது. நியூயார்க் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரோனா பரவியிருந்தது. இந்த செய்தி உலகம் முழுக்க தீயாய் பரவியது.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் அருங்காட்சியகத்தில் உள்ள விலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதில் உள்ள கல்லூர் மண்டலில் வசித்துவரும் வெங்கடேச ராவ் என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக முகத்தில் மாஸ்க் துணி காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ உலகம் முழுக்க கொரோனா தாக்கத்தை அறிந்து வருகிறேன். வெளிநாட்டில் ஒரு புலிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் இந்த ஆடுகளை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேன் எனவே அதனை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள இப்படி செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025