இனி போனில் கேட்கலாம்.! கொரோனா குறித்த சந்தேகத்தை.!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ஐவிஆர்எஸ் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு, இந்த குறள்வழி சேவை மூலம் விளக்கம் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக தனி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 94999-12345 என்ற எண்னை தொடர்பு கொண்டால், தமிழ்நாடு தொற்று கொரோனா தொற்று கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பில் பதிவாகிடும்.
மேலும் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? இல்லையா? என்பது போன்ற விளக்கங்களை இந்த சேவை மூலம் பெற முடியும். இந்த சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொலிக்காட்சி மூலமாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.