போலியோ சொட்டு மருந்து … தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட முகாம்கள்!
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளன. கடந்த ஜனவரி 28ஆம் தேதியன்று 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக அளிக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஏற்கனவே கொடுத்திருந்தாலும், இன்றைய முகாமிலும் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய இடங்களிலும் சென்னையில் மெரினா கடற்கரை, சுற்றுலாப் பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரியில் நடந்த முகாமில், சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட ஏழரை லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.