கொரோனாவின் மறுபக்கம் தெரியுமா? குணமாகியவர்கள் மட்டும் இத்தனை லட்சமாம்!

Default Image

சீனாவில் உருவாக்கி உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான உயிரை பறித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த வைரஸின் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல், எங்கு நமக்கு வந்தால் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது, நாமும் அதற்கு ஒத்துழைத்து வருவது அவசியம். ஆனால், இந்த கொரோனா வைரஸின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்த நாம் மற்றொரு பக்கத்தையும் ஆராய வேண்டும். இதுவரை இந்த கொரோனா வைரஸால் 16,04,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 90 ஆயிரத்து 235 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆனால் 16 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து 356,660 பேர் இதுவரை குணமாகியுள்ளாராம். யாராலும் நம்ப முடியாத இந்த உலக அளவிலான கணக்கெடுப்பு தற்போது மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சத்தை குறைத்துள்ளது.

விட இறந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதாவது ஒரு சதவீதம் தான் பாதிக்கப்பட்டவர்களில் இருந்துள்ளனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை. அரசு ஏற்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கைக்கொள்வது, சுத்தமாக இருப்பது நம்மை நிச்சயம் இந்த கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்