தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு.! பீலா ராஜேஷ்.!
தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 738லிருந்து 834 ஆக உயர்வு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை எனவும் , நேற்றைய விட இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
அதன் படி நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக நிலையில் இன்று மேலும் 6 பேர் குணமடைந்து உள்ளார்கள் இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இதையெடுத்து தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளி வெண்டிலேட்டரில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள் 1480 இதில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.