பாலேஸ்வரம் கருணை இல்ல வழக்கு காஞ்சிபுரம் காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவு!
உயர்நீதிமன்றம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனுவுக்கு காஞ்சிபுரம் காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கருணை இல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் உடல்கள் அப்புறப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் மார்ச் 16-க்குள் காஞ்சிபுரம் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார்.
இதனிடையே பாலேஸ்வரம் கருணை இல்ல மர்மங்கள் குறித்து வெளிப்படையான அமைப்பு விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலவரம் வெளிவரும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.