புதுச்சேரியில் 1% உயர்த்தப்படுகிறது பெட்ரோல் டீசல் மீதான வரி
கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி உளள்து .இந்த வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் புதுச்சேரி அரசும் மத்திய அரசிடம் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.995 கோடி நிதி கேட்டது.ஆனல் மத்திய அரசு இதுவரை அந்த நிதியை வழங்கவில்லை.இந்நிலையில்தான் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்காக பெட்ரோல், டீசல் மீதான வரி 1% உயர்த்தப்பட உள்ளதாக நிதித்துறை செயலர் கர்பிர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.