அட்டகாசமான கேரட் சாதம் செய்வது எப்படி தெரியுமா?
கேரட் நமது கண்களுக்கு நல்ல பார்வை அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ரத்தம் மற்றும் நரம்பு மண்டலங்களுக்கும் இதனால் பல பலன்கள் கிடைக்கிறது. இந்த கேரட்டை நாம் உணவு எப்படி சேர்த்துக் கொள்வது என்று தெரியாமல் இருக்கிறோம். பச்சையாக சாப்பிடுவது நல்லது, ஆனால் அதை எப்படி உணவாக செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- கேரட்
- வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- வடித்த சாதம்
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு சிறிதளவு உப்பு போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு துருவி வைத்துள்ள கேரட்டை அதனுள் தூவி லேசாக வதக்கவும். அதில் சற்று மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு கிளறி எடுத்தால் அட்டகாசமான கேரட் சாதம் தயார்.