மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் கைது.! – மாநில அரசு அதிரடி.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 64 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மும்பை மாநகத்திலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தற்போது மும்பை மாநகரில் பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அதனை மீறினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ளது.