தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்..? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உள்ளது.இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா , தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அப்படி இருக்கையில் கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கிவிட்டு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்..? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது.
தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி இந்த கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியது.குறைவாக பாதிக்கப்பட்ட உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா.? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் அதுமட்டுமல்லாமல் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் ஒரு பொதுவான கோரிக்கையாக நீதிபதிகள் பொதுமக்களுக்கு வைத்துள்ளனர்.அதில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் உறவினர்களும் ,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளவும் என கேட்டு கொண்டார்கள்.