ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டுகள் சிறை.!
தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஈக்வேடார் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரபேல் கொரியா. இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்துள்ளார்.
இவர் 2012-2016-ஆம் ஆண்டு கால தேர்தல் பிரச்சாரத்தின் போது சுமார் 7.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது வருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ரபேல் கொரியா தற்போது ஈக்வேடாரில் இருந்து பெல்ஜியத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.