நீண்ட நாட்களுக்கு பின் சீனாவின் உகான் நகரில் ஊரடங்கு தளர்வு

Default Image

சீனாவின் உகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

உலக நாடுகளை  மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.பின்னர் கொரோனா பாதிப்பால்  நாளுக்கு நாள்  பாதிக்கப்பட்டவர்களின் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் சீனா வைரசைக்கட்டுப்படுத்த திணறியது.

பிறகு  சீனாமேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால்  கொரோனா வைரஸை அங்கு கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த சில நாட்களாகவே  உள்ளூரில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என  சீனா கூறியது.இதற்குஇடையில்தான் சீனாவில் நேற்று  முதல் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.ஏற்கனவே சீனாவில் உள்ள பல நகரங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகின்றது. எனினும், உகான் நகரம்  மட்டும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்தது.இந்நிலையில் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு உகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்