இந்திய ஹாக்கி அணி அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் ஐந்தாமிடம்!
இந்திய அணி மலேசியாவில் நடைபெறும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் அயர்லாந்தைத் தோற்கடித்து ஐந்தாமிடத்தைப் பிடித்தது. மலேசியாவின் ஈப்போ நகரில் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் ஐந்தாம் ஆறாமிடங்களைத் தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய – அயலாந்து அணிகள் விளையாடின. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது மற்றும் முப்பத்திரண்டாவது நிமிடங்களில் இந்தியாவின் வருண்குமார் 2 கோல்களை அடித்தார். சீலானந்த் லக்ரா 28ஆவது நிமிடத்திலும், குர்ஜந்த் சிங் 37ஆவது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர்.
அயர்லாந்து அணியின் ஜூலியன் டேல் 48ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் நான்குக்கு ஒன்று என்கிற கோல் கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி ஐந்தாமிடத்தைப் பிடித்தது. ஏற்கெனவே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து அணி இந்தியாவை மூன்றுக்கு இரண்டு என்கிற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் இந்திய அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.