கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ராகவேந்திரா திருமண மண்டபத்தை பயன்படுத்த நடிகர் ரஜினி வேண்டுகோள்…
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக சிகிச்சை பிரிவுகள் தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை நடிகர் ரஜினி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் சிகிசைக்காக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ஏற்கனவே, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மக்களின் நலனுக்காக அந்த மண்டபத்தில் இடம் அனுமதிக்கப்பட்டது, அதேபோல, தற்போதும் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.