ஜப்பான் முக்கிய நகரங்களில் மட்டும் அவரச பிரகடனம்.! ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன்…

கொரோனாவில் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துகொன்டே வருகிறது. இதனால், உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டுகிறது. கொரோனாவுக்கு பலியானார்கள் எண்ணிக்கை 90-ஐ தாண்டிவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு புது கட்டுப்பாடை விதித்துள்ளது.
அதன் படி, ஜப்பான் நாட்டில் கொரோனா வேகமாக பரவும் டோக்கியோ, ஓஸாகா உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், ரயில் சேவை, வங்கி ஆகியவை மட்டும் இயங்கும் மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025