மும்பை அரசு மருத்துவமனைக்கு 1 கோடி நிதி வழங்கிய ப. சிதம்பரம்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இந்த மருத்துவமனைக்கு, தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். தனது நன்கொடை ப.சிதம்பரம் குறித்து மகாராஷ்டிரா மருத்துவ கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மருத்துவ கல்வித்துறை அதிகாரி ஒருவர், இந்த பணத்தை பயன்படுத்தி, மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவச உடைகள், தனிநபர் பாதுகாப்பு சாதன கிட்கள், உள்ளிட்டவை வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.