குடியரசு தலைவர், பிரதமர் உட்பட அமைச்சர்கள் அனைவரின் சம்பளத்திலும் 30 சதவீதம் கட்.!
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின் சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும், இந்த சம்பள குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சரவை குழுவில் முடிவு செய்யப்பட்டதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மேம்பாட்டு திநிதியும் 2 ஆண்டிற்கு நிறுத்தப்படும் எனவும் அறிவித்தார். இந்த சம்பள குறைப்பு மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் மூலம் 7,900 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் என கூறப்படுகிறது.