தலைவிரித்தாடும் கொரோனா தொற்று… இங்கிலாந்து பிரதமர் கொரோனோ தொற்றால் மருத்துவமனையில் அனுமதி….
போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார். அவர், அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து தகவல்கள்கள பிரதமர் ஜான்ஸன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், பிரதமர் ஜான்ஸனுக்கு தொடர்ந்து காய்ச்சல் விட்டு, விட்டு வந்ததால் அவரால் சுயதனிமையிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தொடர்ந்து அவர், வீட்டுக்குள்ளே இருப்பதாக தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மிகவும் சோர்வாகவும், பரிதாபமான நிலையிலும் தனது வீட்டுஅறையிலிருந்து வெளியேறி மருத்துவமனைக்குச் சென்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.