திண்டுக்கல் டாஸ்மாக் கடையில் 6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு…. காவல்துறை விசாரணை…
கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தற்போது திண்டுக்கல்லில் உள்ள அரசு மதுபானக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் தங்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.