12 லட்சத்தை தொட்ட கொரோனா..ஒரே நாளில் 1 லட்சம் பரவல்..!உலகளவில் கொரோனா!
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கண்டு வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.மேலும் தங்கள் நாட்டு மக்களை எல்லாம் கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகின்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு உலகளவில் லட்சக்கணக்கில் உயர்ந்து உலக சுகாதார நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் வகையில் பரவி வருகிறது.இவ்வாறு வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 1,201,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 64,691 பேர் கொரோனாவால் உலகளவில் பலியாகி உள்ளனர்.
கொடூர கொரோனா பாதிப்பிற்கு அமெரிக்காவில் 311,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் அங்கு 8,452 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 1000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே போல் ஈரானில் 55,743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3452 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இத்தொற்றுக்கு 81,669 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3329 பேர் பலியாகி உள்ளனர்.தற்போது சீனாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.யுனைட்டட் கிங்டத்தில் இத்தொற்றுக்கு 41,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 4313 பேர் பலியாகி உள்ளனர்.
இதே போல் துருக்கியில் வைரஸ் தொற்றுக்கு 23,934 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 501 பேர் பலியாகி உள்ளனர். சுவிஸ் நாட்டில் இத்தொற்றுக்கு 20,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 666 பேர் பலியாகி உள்ளனர்.ஸ்பெயினில் வைரஸ் தொற்றால் 126,168பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 11947 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.