வழிமறித்த போலீசார் ,கற்களை கொண்டு தாக்கிய இளைஞர்கள்

Default Image

கொரோனா வைரஸால் இந்தியாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக  நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவினை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் ,கேரளாவில் இருந்து சில இளைஞர்கள் அவ்வழியாக  கர்நாடக எல்லைக்குள் நுழைய  முயற்சி மேற்கொண்டனர்.அந்த இளைஞர்களை போலீசார் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.  இதனால் கோபமடைந்த இளைஞர்கள் போலீசாரை  நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதனால் அந்த போலீசார் பலத்த காயம் ஏற்பட்டது . பின்னர் அவரை  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்