இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,072 பேரில் 213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்: 

மாநிலம் பாதிப்பு உயிரிழப்பு  குணமடைந்தவர்கள் 
மகாராஷ்டிரா  537 24 42
தமிழ்நாடு  485 3 6
டெல்லி  445 6 15
கேரளா  295 2 41
ராஜஸ்தான்  200 0 21
உத்தரபிரதேசம்  174 2 19
ஆந்திரா  161 1 1
தெலுங்கானா  159 7 1
குஜராத்  105 10 14