சமூக விலகலை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு சீல் வைப்பு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.மேலும் தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2- வது மாநிலக்கமாக உள்ளது.
தமிழகத்தில் சமூக விலகலை கடைபிடிக்க கோரி அரசு அறிவுறுத்தி வருகிறது.ஆனால் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதில் தவறி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சமூக விலகலை கடைபிடிக்க கோரி மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.ஆனாலும் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.