மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 423 லிருந்து 537 ஆக உயர்வு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2902 ஆகவும், பலி எண்ணிக்கை 68 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா 423, தமிழ்நாடு 411, டெல்லி 386, கேரளா 295 என இருந்து வந்த நிலையில், மகாராஷ்டிராவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட 423 லிருந்து 537 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று மட்டும் மும்பை 28, தானே பிராந்தியம் 15, அமராவதி 01, பிசிஎம்சி 01, புனே 02 இது போன்ற புதிதாக 47 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 50 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
The current count of COVID19 patients in the state of Maharashtra is 537.Yesterday, Mumbai 28, Thane Region 15, Amravati 01,PCMC 01, Pune 02 such new 47 positive cases have been identified.
Tilldate 50 people have been cured and discharged from the hospital.#CoronaVirusUpdates— Rajesh Tope (@rajeshtope11) April 4, 2020